Tuesday, May 27, 2014

Arahara Sivanae Aadugavae

உ 
சிவமயம் 

அரஹர சிவனே ஆடுகவே 

ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே 
ஆடுக நடனம் ஆடுகவே அரஹர சிவனே ஆடுகவே                           (ஆடுக)

சிவகை லாசா பரமேசா திரிபுரம் எறிந்த நடராஜா 
பவபயம் போக்கும் பரமேசா பனிமலை ஆளும் சர்வேசா                  (ஆடுக)

அறுகொடு தும்பை மலராட அணிமணி மாலைகள் தானாட 
பெருகிடும் கங்கை தலையாட பிறைமதி யதுவும் உடனாட             (ஆடுக)

சூலம் உடுக்கை உடனாட சூழும் கணங்கள் உடனாட 
ஆலம் குடித்தோன் ஆடுகவே அடியார் மகிழ ஆடுகவே                     (ஆடுக)

ஆலவா யரசே சொக்கேச அவனியை காக்கும் பரமேசா 
ஆலங்காட்டில் ஆடிடுவாய் அரஹரசிவனே ஆடுகவே                      (ஆடுக)

திருக்கடவூரின் கடை ஈசா தில்லையம் பதியில் நடராஜா 
திருமுல்லை மாசிலா மனியீசா திருநடம் ஆடுகவே ஆடுகவே     (ஆடுக)

மயிலை கபாலி ஈஸ்வரனே, மதுரையில் ஆடிய ஆட்டமென்ன 
கயிலையில் ஆடிய ஆட்டமென்ன கால்மாறி ஆடிய நடராஜா        (ஆடுக)


No comments:

Post a Comment