Wednesday, May 28, 2014

Sri Nadarajar Pathigam

 
சிவமயம் 

ஸ்ரீ நடராஜர் பதிகம் 

ஓம்  நமச்சிவாய ஓம் ஓம்  நமச்சிவாய 
ஓம்  நமச்சிவாய ஓம் ஓம்  நமச்சிவாய 

அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவ தேவனே!
ஆதியாய் அநாதியாய்ச் சமைந்த ஜோதி ரூபனே!
மங்கலங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனே 
மைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனே!

எந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம் 
எடுத்த பீடம் ஆலயம் தொடுத்த கூரை கோபுரம் 
செந்தமிழ்ச்சொல் மந்திரம் திருந்தும் அன்பே ஆகமம் 
சிவந்தபுரம் பங்கயம் உவந்தருள் நடேசனே 

மன்றிலே எடுத்தகால் என் மனையிலும் எடுத்துவை மனதிலே நினைத்த நன்மை விரைவிலே முடித்துவை 
என்றும் தீமை அனுகிடமால் ஈசனே தடுத்துவை 
ஏத்தும் அன்பர் குழுவில் என்னை சேர்த்துவை நடேசனே 

ஆ-பயந்த ஐந்தினோடு பால், பழம், பஞ் சாமிர்தம் 
ஆலைவாய்க் கரும்பு, தெங்கு தேன், சுகந்த சந்தனம் 
நீ-பயந்த யாவையும் நினக்களித்தேன் ஈசனே!
நேர்த்தியாய் அனைத்தும் ஆடி வாழ்த்துவாய் நடேசனே!

அட்டநாக பூஷணம் அளிக்கவல்லன் அல்லலனே!
ஆனை, மான், சிறுத்தை வேட்டை ஆடவல்லன் அல்லனே!
இட்டமாலை ஆடையோடு தொட்டுவைத்த சந்தனம் 
என்றும் நல்க வல்லன் வல்லன் கொண்டருள் நடேசனே!

வில்லினால் அடிக்கவோ வீசுகல் பொறுக்கவோ?
மிதித்தபோது கை, பிரம்பை மேலும் நான் எடுக்கவோ?
நல்ல பிள்ளை என்னை ஆளும் நாதனும் நீ அல்லவோ?
நாளும் நான் படைத்த சொல்லும் பூவும் கொள் நடேசனே!

ஆட, நீ எடுத்ததாய் அறிந்தவர் இயம்புவர் 
அல்ல அல்ல என்தலைமேல் சூடஎன்று சொல்கிறேன்!
ஈடில்லாத தெய்வம் நீ இடப்புறம் எடுத்தகால் 
எந்த நோக்கில் என்று சொல்ல வந்தருள் நடேசனே!

மழுவெடுத்(து) எதைவிளக்க மன்றுதொன்றும் ஓடினாய் 
மதியெடுத்த சிரம் இருக்க மத்தனாய் ஏன் ஆடினாய்?
கழுதெடுத்து நடனம் ஆடும் காட்டில் என்ன தேடினாய்?
கையில் நாம் எடுத்ததூபம் கொள்ளுவாய் நடேசனே!

எடுத்ததூபம் ஆதியாவும் ஏற்றருள் மகேசனே!
இன்று நான் படைத்த யாவும் உண்ணுவாய் சபேசனே!
தடுத்த பண்டை வினையகற்றி தாங்குவாய் சர்வேசனே!
சரணம் உன்னை அன்றிஏது? தாங்குவாய் நடேசனே!

வாழி நீ படைக்கும் தெய்வம் மலர் அணை அமர்ந்ததாம் 
வகுத்தளிக்கும் தெய்வம் கூட அரவணை கிடைத்ததாம் 
ஊழிதோறும் ஐந்தொழில் உவந்து செய்யும் ஈசனே!
ஓய்ந்து சற்றென் நெஞ்சனைக்கன் சாய்ந்து கொள் நடேசனே!

ஓம் நமச்சி வாயஓம் சிவாயநம ரூபனே!
ஓதும் ஐந்து சபையில் ஆடும் பாதனே! சங்கீதனே!
வாமியாய்த் தழைத்தசிவ காமிகாதல் நேசனே!
மாறிலாத கருணை நீ வழங்குவாய் நடேசனே!
     

No comments:

Post a Comment