உ
சிவமயம்
வேழமுகம்
சிவமயம்
வேழமுகம்
வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்
வெற்றி முகத்து வேலவனைத் தொழ புத்தி மிகுந்து வரும்
வெள்ளிக்கொம்பன் விக்னெஷ்வரனைத் தொழ
துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே
சிந்தித் தவர்க்கருள் கணபதி ஜயஜய
சீரியவானைக் கன்றே ஜயஜய
அன்புடை அமரரைக் காப்பாய் ஜயஜய
ஆவித் துணையே கணபதி ஜயஜய
இண்டைச் சடைமுடி இறைவா ஜயஜய
ஈசன் தந்தருள் மகனே ஜயஜய
உன்னிய கருமம் முடிப்பாய் ஜயஜய
ஊர்நவ சந்தி உகந்தாய் ஜயஜய
எம்பெரு மானே இறைவா ஜயஜய
ஏழலகுந் தொழ நின்றாய் ஜயஜய
ஐயா கணபதி நம்பியே ஜயஜய
ஒற்றை மருப்புடை வித்தகா ஜயஜய
ஓங்கிய வானைக் கன்றே ஜயஜய
ஒளவிய மில்லா அருளே ஜயஜய
அஃகர வஸ்து ஆனவா ஜயஜய
கணபதி என்வினை களைவாய் ஜயஜய
ஙப்போல மழுவொன் றேந்திய ஜயஜய
சங்கரன் மகனே சதுரா ஜயஜய
ஞய நம்பினர் பாலாடிய ஜயஜய
இடம்படு விக்கின விநாயகா ஜயஜய
இணங்கிய பிள்ளைகள் தலைவா ஜயஜய
தத்துவ மறைதரு வித்தகா ஜயஜய
நன்னெறி விக்கின விநாயகா ஜயஜய
பள்ளியி லுறைதரும் பிள்ளாய் ஜயஜய
மன்றுள் ளாடும் மணியே ஜயஜய இயங்கிய ஞானக்குன்றே ஜயஜய
அரவக் கிண்கிணி ஆர்ப்பாய் ஜயஜய
இலவக் கொம்பொன் றேந்தியே ஜயஜய
வஞ்சனை பலவந் தீர்ப்பாய் ஜயஜய
அழகிய ஆணைக் கன்றே ஜயஜய
இளமத யானை முகத்தாய் இரகுபதி விக்கின விநாயகா ஜயஜய
ஆனந்த லோடாதியில் அடிதொழ ஜயஜய
No comments:
Post a Comment